கூத்தாடி

 அந்தரத்தில் 
 ஒற்றைக் கயிற்றில்
 கையில் கழையோடு
 கவனமாக 
 நடந்து கொண்டிருந்தாள்
 
 கூடியிருந்தவர்
 அவளை
 அண்ணாந்து 
 பார்த்துக் கொண்டிருந்தனர்
 
 இலக்கை நெருங்க நெருங்க
 ஆரவாரம் செய்தனர்
 
 தொட்டதும்
 பலத்த கரகோஷம்

 சிரித்துக் கொண்டே
 குதித்து இறங்கினாள்

 மேலும் பலத்த கரகோஷம்

 பின்
 கூட்டம் கலைந்தது

 தனியாக நின்றாள்

 நீண்ட
 கழிகளைப் 
 பிரித்துச்
 சுமந்து கொண்டு
 மீண்டும்
 தன் பாதையில்
 நடக்கத் துவங்கினாள்