கீரவாணியில் அமைந்த இந்தப் பாடலை இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடியவர் ஸ்வர்ணலதா..எழுதியவர் வைரமுத்து.
இந்தப் பாடல் ஒரு addiction. கேட்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடியாது.
ஸ்வர்ண லதாவின் துல்லியமான ஏக்கம் நிறைந்த குரல், ‘haunting’ என்பதைத் தவிர வேறு வார்த்தை இல்லை. சில பாடல்களுக்கு முன்னால் செயலடங்கி அமர்ந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை. அது போன்ற ஒரு பாடல் இது.