தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் வைரமுத்துவால் இயற்றப்பட்டு, ஏ.ஆர்.ரஹ்மானால் இசையமைக்கப்பட்டது. ஷாஷா திருப்பதியும், சத்ய பிரகாஷும் பாடியுள்ளார்கள்.
ஒவ்வொரு நாளும் பலமுறை இப்பாடலைக் கேட்ட காலம் உண்டு. பித்துக் கொள்ள வைக்கும் பாடல்.
‘நானே..’ என்ற பத்தியில் வரும் தொடக்க சொற்களின் அசைப்புகள், ஒவ்வொரு முறையும் வெவ்வேறானவை. எந்தச் சொல்லாலாவது இந்த அசைப்புகளை சொல்லிவிடமுடியுமா?
ஒவ்வொரு முறையும் புல்லரிக்க வைக்கும் பாடல்.