கரு

அதிகாலை முதலே
கருக் கொண்டிருந்தது 

தளும்பக் காத்திருந்த கண்ணீர் துளி 

பாரம் மிக
பொழியத் துவங்கும்

பெய்யப் பெய்ய
இலகுவாகும்

முற்றிலும்
தன்னை
பெய்தே
ஓயும்

இளக அஞ்சுபவர்
பித்துக் கொண்டலைபவர்

வேண்டுவோர்
வேண்டாதாரின்றி

பெய்யெனப் பெய்ய

மீண்டும்
தவத்தில்
ஆழ்கின்றன
மழை தீர்ந்த மேகங்கள்