குளிர்ந்தவள்

 எரிந்து கொண்டிருந்தது ஒன்று
 காத்துக் கொண்டிருந்தது ஒன்று
 அப்போது தான் வந்திறங்கியது ஒன்று 

 சென்றவரை நினைத்து மூழ்கியது ஒன்று
 பாவங்களைக் கழுவியதொன்று 

 தன்னைக் கரைத்தவர் உண்டு
 மீண்டு எழுபவரும் உண்டு 

 சீதையை 
அம்பையைச் 
சுமந்து

 அனைத்தையும் கண்டு 

 மிக மிகக் குளிர்ந்து

 காலங் காலமாய்

 ஒழுகிக் கொண்டிருக்கிறாள்

 கங்கை