நின்னையே ரதியென்று..

If the video doesn’t play click on the title of the video
இயற்றியவர்: பாரதியார்
இசையமைப்பாளர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
பாடகர்: பிரதீப் குமார்
ஆல்பம்: காதலன் பாரதி
ராகம்: சரசாங்கி
நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா  
தன்னையே சசி என்று 
சரணம் எய்தினேன்...கண்ணம்மா (நின்னையே...) 

பொன்னையே நிகர்த்த மேனி, 
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே.., நித்ய கன்னியே
கண்ணம்மா...(நின்னையே) 

மாறன் அம்புகள் என் மீது 
வாரி வாரி வீச நீ.. 
கண் பாராயோ
வந்து சேராயோ... 
கண்ணம்மா!...(நின்னையே..) 
If the video doesn’t play click on the title of the video

எம்.எஸ்.வி யின் இசையமைப்பில் கே.ஜே. யேசுதாஸ், சசிரேகா பாடிய வெர்ஷன் இது. சந்திரகௌன்ஸ் ராகத்தில் அமைந்துள்ளது

இரண்டு வடிவங்களிலும் அடுத்தடுத்து இப்பாடலைக் கேட்பது என்பது அருமையான இசையனுபவம். முன்னதில் இருப்பது ஒரு modern treatment. பின்னது ஒரு classic. இரண்டும் அதனதன் வழியில் நம் மனதை உருக வைக்கின்றன. இரண்டிலுமே “மாறன் அம்புகள்..” என்ற வரி தான் உச்சம்.