தனி நீலம்

துல்லியமாயிருந்தது வானம்

கழுவித் துடைத்தாற் போல்
அனைத்தும் ஒளி கொண்டிருந்தன

எங்கும் வான் நீலம்
அருகிருந்த கடல் மட்டும் பச்சை

பார்க்க பார்க்க
வானம் தன் திரையை இழுத்துக் கொண்டது

வானாயிருந்த தூரத்துக் கடல்
இப்போது
தனி நீலம் கொண்டது 

இரு பிரம்மாண்டங்கள்
ஒன்றை ஒன்று நோக்கிக் கொண்டன 

எல்லைகள் விரிந்தன
தொடுவான் மிகத் தொலைவில் 

மீண்டும் ஒன்றாகும் வரை

திகைந்த 
இப்புது உலகம்
திகழும்