
அறையின் மூலையில் ஒரு பச்சை நிற பூ ஜாடி சற்றுத் தள்ளி இரண்டு டம்ப்பெல்ஸ் மேசையின் மீது கழற்றி வைக்கப்பட்ட கொலுசு கையில் ஒரு கோப்பை காபி கவிதை..கவிதை.. அரற்றுகிறது மனம் துள்ளி அடையும் எவ்வுச்சத்தில் எங்கும் கவிதைகள்.. மெல்ல அருந்துகிறேன் என்ன இல்லாமல் தான் இருக்க முடிகிறது இப்போதெல்லாம்