காதல் திரு

கண்ணிலிருந்து கரைந்து
ஈஷியிருக்கும் மை

கன்னத்துப் பரு

காதோர மென் மயிர் 

கழுத்தின் கருந்தடம்  

அலமாரியில் அடுக்கி வைத்த
அவள் புடவை வாசம் 

அவனுக்கு
இவை போதும்

அவளைப் பேரழகியாய் மாற்ற

காதல் திரு
முதலில்
அமர்வது
அவன்
மார்பினிலன்றோ