புதுக் கோலம்

கை கால்களை 
ஆட்டியாட்டி
குப்புற விழுந்தே 
விடும்
குழந்தையாய்

செதுக்கத் துவங்கினான்

உருவு கொண்டு வந்தது
அவன் கண்டதா என்ன

தனக்கென
மனம் கொண்டுள்ளது
மாலை

வண்ணங்களில்
தம்மை
நிகழ்த்திக் கொள்ளும்
புதுப்புதுக் கோலங்களைப் போல