சட்டென்று ஒரு பரவசம்
மனம் காரணமின்றி குதூகலிக்கிறது
உயிரின் அடி ஆழம் வரை குளிர்ந்து
புல்லரிக்கிறேன்
எனக்குத் தெரியும்
நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய்
என்னைச் சுற்றிலும்
உன் பார்வை
உன் இருப்பு
நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா
விரிந்த வானின் கீழ்
கையகல நிலத்தில்
ஊசி முனையில்
நின்று கொண்டு
உன்னைப் பற்றி நினைக்கிறேன்
அதே வானின் கீழ்
மலைகளுக்கப்பால்
மற்றொரு
ஊசி முனையில் அமர்ந்து கொண்டு
அதை நீ கேட்கிறாய்
யாருமற்ற
அந்தரத்தில்
நம்
சந்திப்பு
யார் சொன்னார்
உயிர் உடலுக்குள்
மட்டும் தான்
வாழ்கிறதென்று