இருண்ட முட்டுச் சந்து அது
நையப் புடைத்துக்கொண்டிருந்தனர்
அவனை
குரல் வளையை
காலால் அழுத்தியிருந்தான்
ஒருவன்
வழிப்போக்கன்
பதறி விட்டான்
'ஏன்'
'அவன் தந்தை திருடனாம்'
'அதற்கு இவனை..?'
'என் தந்தை நல்லவர் என்கிறான்'
'திருடன் என்று தெரியாதோ'
'திருட்டு என்றே தெரியாதாம்'
'நாங்கள் எல்லோரும் நல்லவர்கள்'
போலப் பேசி ஏளனமாகச் சிரித்தான்
'ஹி..ஹி..'
இளித்தான்
மற்றொருவன்
இன்னும் கொஞ்ச நேரத்தில்
இறக்கவிருப்பவனை
ஒரு முறை
பார்த்து விட்டு
பின்
ஓங்கி ஓங்கி
உமிழ்ந்து கொண்டே
அங்கிருந்து அகன்றான்
வழிப்போக்கன்