சமர்

ஆடிக்குள் இருப்பவனைக்
கொல்ல
ஆடியை உடைக்கிறாய்

உடைந்த சில்
ஒவ்வொன்றும்
ஓர் ஆடி

சுக்குகள் எத்தனையோ
அத்தனை
அவன்கள்

உடைந்தால் 
பெருகும்
வரம் பெற்றவை

ஆடியோடன்று
உன் சமர்
அவனோடு