பயணம்

அகண்ட கருவெளி
அதிலோர் நீலத்துளி

துளியுள்  பச்சைப்புள்ளி 
பச்சைக்குள் செந்நிறக்கூடு

கூட்டுக்குள்  வெண்ணிற ஊற்று 

அது மெல்லப் பெருகி
பெரு வெள்ளமாகிறது 

கறுமை
அதில்
கரைந்தழிகிறது 

ஊற்றின் கண்ணோ

தானோ தனதோ அற்ற
இருப்பே
பயணமென்றான
அழகிய
சிறு
கருந்துளி