யாருக்காய்

என்ன மகிழ்ச்சி
வந்து விட்டதென்று

பொங்கிப் பொங்கிச்
சிரிக்கிறது
இந்த நீரூற்று 

வாசனையும்
அழகுமாய்
பூக்கள்
சொரிந்து நிற்கிறது 
இந்த மரம்

அந்தியின் 
தொடுவானைப் போல
சிவந்திருக்கிறது
இப்போது
தான் 
கழுவிய
இந்த மருதாணிக் கை