விலகல்

ஒரு பெரும் ஆல மரம்
அதன்கீழ் 
ஒரு சிறிய செடி 

தெரியாமல் 
முளை விட்டு விட்டது 

மரத்தின் மூச்சு 
சதா அதன் கழுத்தில் 

சோகையானது
செடி 

இரங்கிய மரம்
தன்னை
கொஞ்சமே கொஞ்சம் 
வளைத்துக் கொண்டது 

வெளிச்சம்
கிடைப்பதற்காக