சொல் மிகுதல்

மழையில் நனைந்து
இசைக் குயிலெனப் பாடி
நடையே ஆடலாக  

 மலரும் நேரத்திற்காய்
 காத்திருந்து
 அணிந்து 

 கோலத்தை வர்ணங்களால் நிறைத்து
 பின்
 கவிதைகள் எழுதியவள் 

 கருப்பு
 குள்ளம்
 குண்டு
 என்பதாக 
 அறியப்படலானாள்

 பின்
 அவளும்
 சொல் மிகையான கவிதையானாள்