ஆடி

ஒரு நாள் இதுவாய்
மறு நாள் அதுவாய்

ஆடி 
காட்டும் 
அன்றைய பிம்பத்தில்
தன்னை 
நிறைத்துக் கொள்கிறாள்

பின்
ஓரிரவில்
அனைத்தையும் களைந்து
ஆடியே இல்லாத
மூலையில்
தனக்கே தனக்கான இருளில்
கரைந்து அமர்கிறாள்