
மேகங்கள் அற்ற வானம் பறவைகளும் இல்லை அலைகள் அற்ற கடல் ஆழமும் இல்லை கடலில் விழுந்த கல்லாய் காலில் கட்டிய எடையாய் எதிரொலியே அற்ற நிசப்தமாய் கனத்த மௌனம் நைந்து போன சொற்கள் புல்வெளிகள் நீரூற்றுகள் அலங்கார விளக்குகள் ஜோடனை செய்யலாம் தான் அது பிணத்தின் இளிப்பே தான்