நீர்க்குமிழி

 நிகழ்வதற்கு முன்னேயே
 காணாமல் ஆகி விடும் 
 நீர்க்குமிழி 

 நிகழும்
 அரை நொடியில்
 அது காட்டும்
 அத்தனை
 வர்ண ஜாலம் 

 நுட்பமனைத்தையும்
 தாங்க வேண்டிய
 முதல் மகவு 

 கொஞ்சம் அழகு  குறைந்தாலும்
 தனியே விடப் படப் போகும்
 அனாதை கைக்குழந்தை 

 இனிய
 சங்கடம்