சங்கிலி

நிகழும் முன் 
அது
நொடி நேரம்
மெல்லியச் சங்கிலியில்
ஊசலாடுகிறது  

அறு பட்டால் 
புதுத்  தொடர் 
துவங்கும்

இல்லை
அதுவே
தொடரும்

விபத்தோ
தேர்வோ
விதியோ