
பன்னிரண்டு கால்கள் எட்டு கைகள் நான்கு கொம்புகள் ஆறு விஷக் கொடுக்குகள் பத்து கண்கள் ஐந்து வாய்கள் மூன்று சிறகுகள் வேறு பேருருவம் கொண்டிருந்தாள் ஒரு கையால் மக்களைப் புரந்தாள் மற்றொன்றால் உணவு சேர்த்தாள் ஒன்றால் கூடு அமைத்தாள் மற்றொன்றால் எதிரிகளை அழித்தாள் நூறு நூறு முட்டைகள் இட்டாள் அவர்கள் உலகை அவளே சிருஷ்டித்தாள் அவர்களின் பராசக்தி அவர்களின் வான் நிறைந்து நின்று அவர்களைக் காத்தாள் சில சமயம் அழிக்கவும் செய்தாள் அவரவர்க்கு அவரவர் தெய்வம்