காந்தன்

முழுக் கறுப்பு

தனிக் கறுப்பு

இன்மையெனும் அடர் கறுப்பு

காலம் இல்லா ஆழ் கறுப்பு

அனைத்தையும் உண்ணும் தீக்கறுப்பு

வரம்பழிந்தால் கரைந்தழிவர்

வெளிச்சத்தையும் வெளி விடாத காந்தன்

கருந்துணைவன்

என்

காதலன்