சுவாதித் திருநாள் இயற்றிய எட்டாவது நவராத்திரி கிருதியான ‘பாஹி ஜனனி சந்ததம்’ என்னும் இப்பாடல் நாட்டைகுறிஞ்சி ராகத்தில் அமைந்துள்ளது. பாடகர்- சங்கரன் நம்பூதிரி
பாபநாசம் சிவன் இயற்றிய தேவி நீயே துணை என்ற இப்பாடல் ராகம் கீரவாணியில் அமைந்துள்ளது. பாடகர்கள்: ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், ஐஸ்வர்யா, சௌந்தர்யா (ஐஸ்வர்யாவும், சௌந்தர்யாவும் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பேத்திகள்)
முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய கமலாம்பா நவாவரணத்தின் எட்டாவது பாடலான ‘ஸ்ரீ கமலாம்பிகே’ என்ற இப்பாடல் கண்டா ராகத்தில் அமைந்துள்ளது. முதல் வார்த்தையான ‘கமலாம்பிகே’ எட்டாவது விபக்தியான சம்போதனா விபக்தியில் அமைந்துள்ளது. பாடுபவர்: டாக்டர். சௌம்யா