வலை போன்றிருந்தது
எந்தத் திருப்பத்திலும் அவள் தடுமாறவில்லை
நேராகச் சென்று
காணிக்கை செலுத்தினாள்
மக்களைப் பெற்றவள்
புன்னகையுடன்
ராணியாய்
சேவகர் புடை சூழ
அவை நடுவே அமர்ந்திருந்தாள்
அடுத்த ஈற்று கருவுற்றிருந்தாள்
அவளுக்குப் பிறக்கப் போகும்
ஒருவளுக்கு
சிறகு முளைக்கும்
தன் காதலனுடன் உல்லாசமாய் பறப்பாள்
காற்றில் கலப்பர்
தரை தொடுவர்
அவள் சிறகிழப்பாள்
அவன் நினைவுகளை
ஈற்று ஈற்றாய் பிரசவித்து
தனக்கென்று நாடு கொள்வாள்
வழிவழியாய்
சிறகிழந்து
நாடு கொண்டு
கோலோச்சினாள் ராணி
பின்னர் ஒரு சமயம்
சிறகிழந்து
நாடிழந்து
மானமிழந்து
அடிமையானாள்