லலிதா ஸஹஸ்ர நாமம்-தமிழில் (401-500)

विविधाकारा
vividhakara
வித விதமான ரூபங்களை உடையவள்
विद्याऽविद्यास्वरूपिणी
vidya(a)vidya svarupini
வித்யை அவித்யை இரண்டின் உருவமாக இருப்பவள்
महाकामेशनयनकुमुदाह्लादकौमुदी 
Mahakameshanayana kumudahlada kaumudi
மஹா காமேஸ்வரனின் கண்கள் என்னும் அல்லி மலரை மலரச் செய்யும் நிலவொளியானவள்
भक्तहार्दतमोभेदभानुमद्भानुसन्ततिः 
Bhaktahardhatamobheda bhanumadbanu santatih
பக்தர்களின் மனதில் இருக்கும் தமோ குணத்தை விரட்டும் சூர்யனிலிருந்து உதித்த சூர்யக் கிரணங்களைப் போன்றவள்
शिवदूती
Shivaduti
சிவனை தூதனாகக் கொண்டவள்/சிவனுக்கு தூது செல்பவள்
शिवाराध्या
shivaradhya
சிவனால் ஆராதிக்கப் படுபவள்
शिवमूर्तिः
shivamurti
சிவனின் ஸ்தூல உருவமாக இருப்பவள்/சிவனைத் தன் உருவமாகக் கொண்டவள்
शिवङ्करी
shivankari
சிவம்(மங்கலம்) அளிப்பவள்/தன் பக்தர்களை சிவமாக ஆக்குபவள்
शिवप्रिया
Shivapriya
சிவனுக்கு பிரியமானவள்
शिवपरा
shivapara
சிவனுக்கு மட்டுமே ஆட்பட்டவள்
शिष्टेष्टा
shishteshta
உத்தமர்களால் விரும்பப் படுபவள்
शिष्टपूजिता
shishta-pujita
உத்தமர்களால் பூஜிக்கப் படுபவள்
अप्रमेया
Aprameya
நிரூபிக்கப் பட முடியாதவள் 
स्वप्रकाशा 
svaprakasha
சுயமாக பிரகாசமாக இருப்பவள்
मनोवाचामगोचरा
manovachamagochara
மனம் மற்றும் சொற்களின் புலத்துக்குள் வராதவள்
चिच्छक्तिः
Chichakti
சித்தத்தின் ஆற்றலானவள்
चेतनारूपा
chetanarupa
சுத்தப் பிரஞ்கையின் உருவமாய் இருப்பவள்
जडशक्तिः
jadashakti
ஜடங்களுக்கு ஆற்றலை அளிப்பவள்/ஜட உலகை ஆக்கும் ஆற்றல் கொண்டவள்
जडात्मिका
jadatmika
ஜட உலகின் ஆத்மாவாக இருப்பவள்
गायत्री
Gayatri
காயத்ரி மந்த்ரமாக இருப்பவள்
व्याहृतिः
vyahruti
வார்த்தைகளாய் இருப்பவள்/சொற்களின் அரசி
सन्ध्या
sandhya
சந்தியா காலமாய் இருப்பவள்
द्विजवृन्दनिषेविता
dvijabrunda nishevita
இரு பிறப்பாளர்களால் சேவிக்கப் படுபவள்
तत्त्वासना
Tatvasana
தத்துவங்களை ஆசனமாகக் கொண்டவள்/தத்துவங்களில் இருப்பவள்
तत्
tat
அது(பிரம்மம்) ஆனவள்
त्वं
tvam
நீ எனப் படுபவள்
अयी
aei
அன்னையானவள்
पञ्चकोशान्तरस्थिता
panchakoshantarah sthita
அன்னமய கோசம் முதலான ஐந்து கோசங்களில் உறைபவள்
निःसीममहिमा
Nisima mahima
வரம்பில்லா மகிமை கொண்டவள்
नित्ययौवना
nitya-yauvana
எப்போதும் இளமையானவள்
मदशालिनी
madashalini
மதம்(உன்மத்தம்) கொண்டு ஜொலிப்பவள்
मदघूर्णितरक्ताक्षी
Madaghurnita raktakshi
மதத்தால்(உன்மத்தத்தால்) மயக்கமுற்ற சிவந்த கண்களை உடையவள்
मदपाटलगण्डभूः
madapatala gandabhuh
மதத்தால்(உன்மத்தத்தால்) சிவந்த ரோஜாக் கன்னங்களை உடையவள்
चन्दनद्रवदिग्धाङ्गी
Chandana drava digdhangi
சந்தன திரவியம் பூசப்பட்ட அங்கங்களை உடையவள்
चाम्पेयकुसुमप्रिया
champeya kusumapriya
செண்பக மலர்களை விரும்புபவள்
कुशला
Kushala
திறமையானவள்
कोमलाकारा
komalakara
மென்மையானவள்
कुरुकुल्ला
kurukulla
குருகுல்லா(குருவிந்தம் என்னும் மணியில் அமைந்த சக்தி) என்ற சக்தியானவள்
कुलेश्वरी
kuleshvari
குலத்தின் அரசி(குலம் என்பது அறிபவர், அறியப்படுவது, அறிவு ஆகியவற்றின் தொகை)
कुलकुण्डालया
Kulakundalaya
குலகுண்டா(மூலாதார சக்ரத்தின் பிந்து) வில் அமைபவள்
कौलमार्गतत्परसेविता
kaulamarga tatpara sevita
கௌல மார்க்கம் என்னும் வழிக்கு ஆட்பட்டவர்களால் வழிபடப்படுபவள்
कुमारगणनाथाम्बा
Kumara gananadhamba
குமரனுக்கும் கணநாதனுக்கும் தாயானவள்
तुष्टिः
tushtih
நிறைவு கொண்டிருப்பவள்
पुष्टिः
pushti
புஷ்டியாய் இருப்பவள்
मतिः
mati
மதி கொண்டவள்
धृतिः
dhrutih
வலிமை கொண்டவள்
शान्तिः
Shanti
சாந்தி கொண்டவள்
स्वस्तिमती
svastimati
பேருண்மையானவள்
कान्तिः
kanti
காந்தி நிறைந்தவள்
नन्दिनी
nandini
ஆனந்தம் அளிப்பவள்
विघ्ननाशिनी
vignanashini
விக்னங்களை நாசம் செய்பவள்
तेजोवती
Tejovati
தேஜஸால் ஜொலிப்பவள்
त्रिनयना 
trinayana
ஸுர்யன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று கண்களைக் கொண்டவள்
लोलाक्षी
lolakshi
சுற்றும் விழிகளையடையவள்
कामरूपिणी
kamarupini
காமத்தின் உருவானவள்
मालिनी
Malini
மாலைகள் அணிந்தவள்
हंसिनी
hamsini
ஹம்ஸமானவள் (ஆன்மீகத்தில் மிகப் பெரும் உயரத்தை அடைந்த யோகினிகளை ஹம்சினிகள் என்றழைக்கின்றனர்)
माता
mata
அன்னை
मलयाचलवासिनी
malayachala vasini
மலையாசலத்தில் வசிப்பவள்
सुमुखी
Sumukhi
அழகிய முகம் கொண்டவள்
नलिनी
nalini
தாமரை இதழ்களைப் போல மென்மையும் அழகும் கொண்டவள்
सुभ्रूः
subhru
அழகிய புருவங்களைக் கொண்டவள்
शोभना
shobhana
சோபை நிறைந்தவள்
सुरनायिका
suranaeika
தேவர்களின் தலைவி
कालकण्ठी
Kalakanti
ஆல கால விஷத்தை கண்டத்தில் கொண்டவனின் மனைவி
कान्तिमती
kantimati
காந்தி(ஒளி) கொண்டவள்
क्षोभिणी
kshobhini
மன எழுச்சி கொள்ளச் செய்பவள்
सूक्ष्मरूपिणी
sukshmarupini
சூக்ஷ்ம உருவம் கொண்டவள்(ஐம் புலன்களால் அறியப்பட முடியாதவள்)
वज्रेश्वरी
Vajreshvari
வஜ்ரேஸ்வரி என்னும் தேவி
वामदेवी
vamadevi
வாம தேவனான் சிவனின் பத்னி
वयोऽवस्थाविवर्जिता
vayovastha vivarjita
வயதால்(காலத்தால்) உண்டாகும் மாற்றங்கள் அற்றவள்
सिद्धेश्वरि
Sideshvari
சித்தர்களால் வழிபடப்படும் தேவி
सिद्धविद्या
sidhavidya
சித்த வித்யா என்னும் மந்திர ரூபமானவள்
सिद्धमाता
sidhamata
சித்தர்களின் தாயானவள்
यशस्विनी
yashasvini
புகழ் கொண்டவள்
विशुद्धिचक्रनिलया
Vishudichakra nilaya
விசுத்தி சக்ரத்தில் நிலை கொண்டவள்
आरक्तवर्णा
aaraktavarna
இளஞ்சிவப்பு நிறமானவள்
त्रिलोचना
trilochana
மூன்று கண்களைக் கொண்டவள்
खट्वाङ्गादिप्रहरणा
Khatvangadi praharana
கட்வாங்கம் என்னும் கோல் முதலான ஆயுதங்கள் ஏந்தியவள்
वदनैकसमन्विता
vadanaika samanvita
ஒரே முகம் கொண்டவள்
पायसान्नप्रिया
Payasanna priya
பாயசன்னத்தை விரும்புபவள்
त्वक्स्था
tvakstha
தோலில் நிலை கொள்பவள்(தொடு புலனின் தெய்வமானவள்)
पशुलोकभयङ्करी
pashuloka bhayankari
மாக்களின்(புலனின்பத்திலேயே கட்டுண்டு இருப்பவர்களின்) உலகத்துக்கு பயம் கொடுப்பவளாக இருப்பவள்
अमृतादिमहाशक्तिसंवृता 
Amrutadi mahashakti samvruta
அம்ருதா முதலான மஹா சக்திகள் சூழ இருப்பவள்
डाकिनीश्वरी
dakinishvari
டாகினி தேவியானவள்
अनाहताब्जनिलया
Anahatabjanilaya
அனாஹதம் என்னும் இதயத் தாமரையில் வீற்றிருப்பவள்
श्यामाभा
shyamabha
கரு நிறத்தவள்
वदनद्वया
vadanadvaya
இரண்டு முகங்கள் கொண்டவள்
दंष्ट्रोज्ज्वला
Damshtrojvala
ஒளிரும் தந்தங்களை(கோரை பற்களை) உடையவள்
अक्षमालादिधरा
akshamaladi dhara
ருத்ராக்ஷ மாலை முதலானவைகளை அணிந்தவள்
रुधिरसंस्थिता
rudhira sansdhita
உதிரத்தில் நிலை கொள்பவள்
कालरात्र्यादिशक्त्यौघवृता
Kalaratryadishaktyao-ghavruta
காள்ராத்ரி முதலான சக்திகளால் சூழப்பட்டவள்
स्निग्धौदनप्रिया
snigdhao-dana priya
எண்ணெய், நெய் நிறைந்த கொழுப்பு உணவுகளை விரும்புபவள்
महावीरेन्द्रवरदा
Mahavirendra varada
பெரும் வீரர்களின் தலைவனுக்கு வரங்களை அளிப்பவள்
राकिण्यम्बास्वरूपिणी
rakinyamba svarupini
ராகினி என்னும் தேவியின் உருவில் இருப்பவள்
मणिपूराब्जनिलया
Manipurabja nilaya
மணிபூர சக்ரத்தில் உள்ள தாமரையில் நிலை பெற்றவள்
वदनत्रयसंयुता
vadanatraya samyuta
மூன்று முகங்கள் கொண்டவள்
वज्रादिकायुधोपेता
Vajradikayudhopeta
வஜ்ராயுதம் முதலான ஆயுதங்களைக் கொண்டவள்
डामर्यादिभिरावृता 
damaryadibhiravruta
டாமரி முதலான தேவதைகளால் சூழப் பட்டவள்
रक्तवर्णा
Rakta-varna
சிவப்பு நிறத்தவள்
मांसनिष्ठा
mamsanishta
உயிர்களின் மாமிசத்தில் நிலை கொள்பவள்