சிறை

இதுவா என் குரல்

இப்படி ஒரு உடல்

தோல்
உயரம்
முகம்

யார் இது


என்ன செய்து கொண்டிருக்கிறாள்

முற்றிலும் அந்நியமானவள்


இவள் உடலிலா

நான்