சுவாதித் திருநாள் இயற்றிய ஆறாவது நவராத்திரி கிருதியான ‘சரோருஹாசன ஜாயே’ என்ற இந்தப் பாடல் பந்துவராளி ராகத்தில் அமைந்துள்ளது. பாடகர்: டாக்டர் அஸ்வதி வினு.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய ‘அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்’ என்ற இந்தப் பாடல் துஜாவந்தி ராகத்தில் அமைந்துள்ளது. பாடகர்: ரித்விக் ராஜா, வயலின்: ராஜீவ் முகுந்தன். நவராத்திரியின் ஐந்தாம் திருநாளில் அன்னை அகிலாண்டேஸ்வரி கவி காளிதாசனுக்கு தாம்பூலம் கொடுக்கும் அலங்காரத்தில் இருப்பாள். அதுவே இந்தப் பாடலை பதிவில் போடுவதற்கு உந்துதலாய் இருந்தது.
கமலாம்பா நவாவரணத்தின் ஆறாவது கிருதியான ‘கமலாம்பிகாயாஸ்தவ பக்தோஹம்..’ என்ற இந்தப் பாடல் புன்னாகவராளி ராகத்தில் அமைந்துள்ளது. எல்லா ஆவரண கிருதிகளைப் போல, இதன் முதல் வார்த்தை ஆறாவது விபக்தியில் அமைந்துள்ளது. பாடகர்: சவிதா நரசிம்மன்.