சாட்சி பூதம்

அரைக்கண் தான் திறக்க முடிந்தது
அதையும் அசைக்க முடியவில்லை
காட்சிகள் மங்கலாகத் தெரிந்தன

கை கால்கள் கல்லாய் சமைந்திருந்தன
போட்டது போட்ட படி கிடந்தேன்

யார் யாரோ வந்தனர்
நடித்து விட்டு மறைந்தனர்

அவர்களுக்குள் பேசினர்
என்னிடமும் பேசினர்

நான் கேட்கிறேனா 
எவருக்கும் தெரியவில்லை

ஆனால் எனக்குத் தெரியும்

எல்லோரின் உள் மனதும்
அவர் தம் விழைவும்

பேச முடியா சாட்சியாய்
இதோ இங்கே கிடக்கிறேன்