சுவாதித் திருநாள் இயற்றிய ஐந்தாவது நவராத்திரி கிருதியான ‘ஜனனி மாமவ’ என்ற இப்பாடல், பைரவி ராகத்தில் அமைந்துள்ளது. பாடுபவர்கள்: திருச்சூர் சகோதரர்கள்.
ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய கமாஸ் ராகத்தில் அமைந்த ‘மாதே மலையத்வஜ பாண்ட்ய சஞ்சாதே’ என்ற இந்த தாரு வர்ணம் அன்னை மீனாக்ஷியைப் போற்றி எழுதப்பட்டது. பாடுபவர்கள் ரஞ்சனி காயத்ரி சகோதரிகள்.
கமலாம்பா நவாவரணத்தின் ஐந்தாவது கிருதியான ‘ ஸ்ரீ கமலாம்பாயா பரம் நஹிரே ரே சித்த..’ என்ற இப்பாடல் பைரவி ராகத்தில் அமைந்துள்ளது. ‘கமலாம்பாயா’ என்ற முதல் சொல் ஸமஸ்க்ருதத்தின் ஐந்தாம் விபக்தியில் அமைந்துள்ளது. பாடுபவர்: சீதா ராஜன்.