
பூ விழும் ஓசையைப் போல் ரகசியமாய் ஒலிக்கிறது அவன் மனம் முகம் உடல் தோல் அனைத்தும் திரையிட்டிருக்கின்றன அவன் ஆன்மாவை சிறிய நிலையின்மையும் பல மடங்கு தள்ளாடச் செய்கிறது அவன் படகை நா கூசும் முன் நரம்புகள் கூசி விடுகின்றன அவனுக்கு அவன் கண்களைக் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள் மூச்சில் சொற்களாய் ஆகும் வரை காத்திருப்பது கூட அழகன்று