புகைப்படம்

பழைய ஆல்பம்
பகைவனின் புகைப்படம்

இவன் படம் என்னிடம் எப்படி

புன்னகைத்துக் கொண்டிருந்தான்

சிறிய வெட்கம் வேறு

எத்தனை அழகு

இந்தப் புன்னகை 
மட்டும்
எனக்கானதாயிருந்திருந்தால்
பகை கொண்டிருக்கவே மாட்டேன்

என்ன செய்ய
இது
என் கணக்கில்
எழுதப் படவில்லை

தவறான அறைக்குள்
நுழைந்தது போல்
சட்டென்று மூடினேன்

அந்தரங்கத்தைக் 
காண நேர்வது
துர்பாக்கியம் தான்