சுவாதித் திருநாளின் நான்காவது நவராத்திரி கிருதியான ‘பாரதி மாமவ’ தோடி ராகத்தில் அமைந்துள்ளது. பாடகர்-காயத்ரி வெங்கட் ராகவன்.
நவராத்திரியின் இடை மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவி வழுத்தப்படுகிறாள். முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய லக்ஷ்மி தேவியின் மீதான ‘ஹிரண்மயீம்..’ என்ற இந்தக் கீர்த்தனை ராகம் லலிதாவில் அமைந்துள்ளது.
இந்தப் பாடலைப் பற்றி ஒரு சிறிய கதை–முத்துஸ்வாமி தீக்ஷிதரின் இரண்டாம் மனைவிக்குத் தன்னிடம் அதிக செல்வம் இல்லையே என்ற மனக்குறை. அவள் தீக்ஷிதரை, அவர் பாடல்கள் இயற்றுகிறாரே தவிர செல்வம் எதுவும் சேர்ப்பதில்லை என்று இடித்துரைக்கிறாள். அவர் மனம் வருந்தி இந்தப் பாடலை இயற்றுகிறார். அன்று இரவு அவர் மனைவி தனக்கு லக்ஷ்மி தேவி பொன்னால் அபிஷேகம் செய்வதாகக் கனவு காண்கிறாள். பின்னர் திருவாரூர் கமலம் என்ற தேவதாசி தீக்ஷிதரிடம் இந்தக் கீர்த்தனையை கற்றுக் கொள்ளும் போது அவருக்கு பொன் நாணயங்களை தட்சிணையாகக் கொடுத்துக் கற்றுக் கொள்கிறாள்.
கமலாம்பா நவாவரணத்தின் நான்காவது பாடலான ‘கமலாம்பிகாயை கனகாம் சுகாயை’ என்ற இந்தப் பாடல் காம்போதி ராகத்தில் அமைந்துள்ளது. முதல் வார்த்தையான ‘கமலாம்பிகாயை’ ஸமஸ்கிருதத்தின் நான்காவது விபக்தியில் அமைந்துள்ளது. பாடுபவர் – சீதா ராஜன்