சுவாதித் திருநாளின் மூன்றாம் நவராத்திரி கிருதியான ‘தேவி பாவனே சேவே’ என்ற இப்பாடல் சாவேரி ராகத்தில் அமைந்துள்ளது. பாடுபவர்: கே.வி. நாராயணசாமி.
‘தாரிணி தெலுசு கொண்டி’ என்ற இப்பாடல் தியாகய்யரால் திருவொற்றியூர் திரிபுர சுந்தரியம்மனின் பெயரில் இயற்றப்பட்டது. இது ராகம் சுத்த சாவேரியில் அமைந்துள்ளது. இந்த ராகத்தின் ஹிந்துதானி வடிவம் தான் துர்கா ராகம். பாடகர்- ஜி.என்.பாலசுப்ரமணியன்.
முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கமலாம்பா நவாவரணத்தின் மூன்றாம் பாடலான ‘கமலாம்பிகயா கடாக்ஷிதோஹம்’ என்ற இப்பாடல் சங்கராபரணத்தில் அமைந்துள்ளது. ‘கமலாம்பிகயா’ என்ற முதற்சொல் ஸ்மஸ்க்ருதத்தின் மூன்றாம் விபக்தியில் அமைந்துள்ளது.