காணாமல் போன கடல்

நீலச் சுவராய்
தொடு வானம் வரை
திசையை மறைத்து
பெருகிக் கிடந்த கடலைக்
காணவில்லை

அவ்விருளில் இப்போது இருப்பது

வானா
வெளியா

சில இடங்களில் புல்வெளி
ஒரு இடத்தில் காடு
சுற்றி வளைத்து மலைகள்
மலைக்கு அந்தப்புறம் 
பாழ்வெளியா

இக்கணம்
அதை
என்னவென்று
அழைப்பது

கடலா.. கடலில்லையா..

காணாமல் போவதென்றால் 
இல்லாமல் ஆவதா