கல்யாணி ராகத்தில் அமைந்த ‘பாஹிமாம் ஸ்ரீ வாகீஸ்வரி’ என்னும் இப்பாடல் ஸ்வாதி திருநாள் மகாராஜா இயற்றிய நவராத்திரி கிருதி வரிசையில் இரண்டாவது ஆகும். பாடுபவர்: அம்ருதா வெங்கடேஷ். இவர் இளவரசர் ராம வர்மாவிடமிருந்து இசை பயில்கிறார். ராம வர்மா ஸ்வாதித் திருநாளின் பரம்பரையில் வந்தவர்.
பைரவி ராகத்தில் அமைந்த இந்த ஸ்வரஜாதி தஞ்சாவர் நால்வர் பரம்பரையில் வந்த பொன்னைய்யா பிள்ளை அவர்களின் ஸாஹித்யம். ‘நீ அருளாயோ தாயே” என்று நாகப்பட்டினத்தின் இறைவி நீலாயதாக்ஷியை வேண்டிப் பாடுகிறார். ‘நீ’ என்ற சொல் ‘நீ’ என்ற ஸ்வரத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு அமைந்திருப்பதை ஸ்வராக்ஷரம் என்பர்.
ஆனந்த பைரவியில் அமைந்த ‘கமலாம்பா சம்ரக்ஷது மாம்’ என்ற இப்பாடல் முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய கமலாம்பா நவாவரணத்தின் முதல் பாடலாகும். துவக்க வார்த்தையான ‘கமலாம்பா’ என்ற சொல் ஸமஸ்கிருதத்தின் முதல் விபக்தியில் (வேற்றுமை உருபு) வருகிறது. பாடுபவர்கள்- ரஞ்சனி காயத்ரி சகோதரிகள்.
கமலாம்பாம் பஜரே என்ற இந்த இரண்டாவது கமலாம்பா நவாவரணப் பாடல் ‘கல்யாணி’ ராகத்தில் அமைந்துள்ளது. பாடல் துவங்கும் வார்த்தையான கமலாம்பாம் ஸமஸ்க்ருதத்தின் இரண்டாம் விபக்தியில் அமைந்துள்ளது. பாடுபவர் பாம்பே ஜெயஸ்ரீயின் புதல்வரான அம்ருத் ராம்நாத்.