
சலனமற்றிருந்தது அக்கடல் அதைக் கிழித்துக் கொண்டு சென்றது ஒரு படகு பச்சை நிறத் தாளில் ஒரு வெள்ளை வரி வரி மறைய அதிக நேரம் ஆகவில்லை உழுது சென்ற பள்ளத்தை நீர் இட்டு நிரப்பி விட்டது மீண்டும் பச்சைப் பரப்பு ஆயினும் தடம் மறைய வில்லை சின்னச் சின்ன அலையாய் அது எங்கெங்கோ பயணிக்கிறது பள்ளமோ தடமோ அலையோ அடங்கும் முன் மற்றொரு படகு அங்கு வந்து விடலாம் வந்தால் தான் என்ன அது கடலன்றோ