கௌஷிகி சக்ரபர்த்தி பாடும் இந்த தாத்ரா சாருகேசி ராகத்தில் அமைந்துள்ளது. இது கர்நாடக சங்கீதத்திலும் அதே பெயரால் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் இருந்து தான் இந்த ராகம் ஹிந்துஸ்தானிக்கு சென்றிருக்கிறது.
சிருங்கார ரசத்திலோ விரஹ பாவத்திலோ இந்த ராகத்தை உபயோகப்படுத்துவர்.
நிறைய திரைப் பாடல்களை இந்த ராகத்தில் அமைப்பர்.
மதராஸப்பட்டிணத்தில் வரும் “ஆருயிரே..” பாடல் இந்த ராகத்தில் அமைந்தது. சோனு நிகம், ஜி.வி. பிரகாஷ், சைந்தவி இப்பாடலைப் பாடியுள்ளனர்.