கௌஷிகி சக்ரபர்த்தி பாடும் இந்த பந்திஷ் பஸந்த் முகாரி ராகத்தில் அமைந்துள்ளது. இந்த ராகத்தை கோமல் பைரவ் என்றும் அழைக்கின்றனர். கர்னாடக சம்பிரதாயத்தில் இதை வகுளாபரணம் என்று அழைக்கிறார்கள். இது விடியலில் பாடப் பட வேண்டிய ராகம்.
இதை அரபிக் இசையில்(maqam-scale based arabic musical system) ஹிஜாஸ் என்று அழைக்கின்றனர். மசூதிகளில் ஒலிபரப்பப்படும் பாங்கு அழைப்பும் பெரும்பாலான நேரங்களில் இந்த ராகத்தில் அமைந்திருக்கும்.
ஹிஜாஸ் பாரஸீகர்கள் வழியாக இந்தியாவுக்கு வந்தது. தென்னிந்தியாவில் வகுளாபரணமாகப் பெயர் பெற்றது. பின்னர் வகுளாபரணத்தின் பிரயோகங்களும் ஹிஜாஸும் சேர்ந்து பஸந்த் முகாரியாக மாறியது.
Jewish, Spanish flamenco இசையும் இந்த ராகத்தை பிரதானமாகக் கொண்டது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் சின்மயி பாடியுள்ள ‘குரு’ படத்தில் வரும் ‘மய்யா மய்யா’ இந்த ராகத்தில் அமைந்துள்ளது.
துள்ளுவதோ இளமை, பட்டத்து ராணி, நினைத்தேன் வந்தாய், ஆசை நூறு வகை முதலிட்ட பல திரைப்பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்துள்ளன.
content/ராகம்/பாடல்கள் தேர்வு: தேஜஸ்ரீ ஜெயகாந்த்