
முதலில் அவரிருவரும் ஒன்றாய் இருந்தனர் பின் பிரிந்து எதிரெதிர் நின்றனர் அவள் ஆற்றலின் முன் அவன் தோற்றே போனான் மொழி செல்வம் உடைமைகள் அனைத்தையும் இழந்தான் மாயங்காட்டி மீட்டுக் கொண்டான் வெகுண்டு கண் மறைத்தாள் அவளே இல்லாதானாள் கண் திறக்க தோள் சேர்ந்து இணை பிரியாதாயினர் பார்ப்பவனும் பார்க்கப்படுபவனும் போல