
அஷ்வினி பிடே தேஷ்பாண்டே, ராகம் துர்காவில் பாடும் தரானா இது. ராகம் துர்கா இரவுக்கான ராகம். இது சிருங்கார ரசத்தை பிரதானமாக வெளிப்படுத்துவது. ஹிந்துஸ்தானி அமைப்பில் கற்பிக்கப்படும் முதல் சில ராகங்களில் துர்காவும் ஒன்று.
பண்டிட் வெங்கடேஷ் குமார் பாடும் இந்த பந்திஷும் துர்காவில் அமைந்தது தான்.
இளைய ராஜா இசையமைத்த ‘கிழக்கே போகும் ரயிலில்’ வரும் ‘கோவில் மணி ஓசை’ இந்த ராகத்தில் அமைந்த பிரபலமான பாடல். மலேசியா வாசுதேவனும், எஸ். ஜானகியும் பாடியுள்ளனர். துர்காவுக்கு மிகச் சிறந்த திரை எடுத்துக்காட்டாக இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டிருக்கிறது.
ராகம்/பாடல் தேர்வு: தேஜஸ்ரீ ஜெயகாந்த்