ஆதுரம்

ஒன்றன் பின் ஒன்றாக
ஐந்து கிடேரிகள் 
ஈன்ற
அன்னைப் பசு அது

குனிந்து
அவள்
உச்சி முகர்ந்தது

வருடங்கள் முன்
தன்னையேப் போல்
அவளும்
புது மணம்
கொண்டிருந்தாள்

பின்பு
பூவின் 
சந்தனத்தின்

சில நாட்கள்
கண்ணீரின்
பின் கருவின்

பால் மணம் கொண்டபோது
சின்னப் புன்னகைத் தான் பூண்டிருந்தாள்

எனினும் அழகாய் இருந்தாள்

மீண்டும் கரு மணம் கொண்டிருக்கிறாள்
இம்முறையாவது ஆண் மகவாய் இருக்க வேண்டும்

அவள் முகத்தை
ஆதுரமாய்
நக்கியது