ஜன்னல்

ஜன்னல் வழியே 
பார்த்தால்

விரிந்த நீல வானம்
அதன் ஆடியாய்
பெருங்கடல்

மிதக்கும் கப்பல்கள்
கரை தொடும் படகுகள்

நீரூற்றுகள் நிறைந்த பூங்காக்கள்
வண்ண மலர்கள் கரை கட்டும் நடைபாதைகள்

நக்ஷத்திரங்கள்
வெண்ணிலவு

என
இவ்வாறு
இல்லாவிட்டால்

அல்லது
இருப்பது போல்
எண்ணிக் கொள்ளா விட்டால்

இருத்தல் எங்கனம்