பந்திஷ் பேண்டிட்ஸ் என்னும் வெப் சீரிஸில் வரும் ‘விரஹ்’ என்னும் இந்தப் பாடலும் பூர்யா தனஸ்ரீயில் அமைந்துள்ளது. ஷங்கர் மஹாதேவன் பாடியது இது. இசையமைப்பு ஷங்கர்- எஹ்சான்-லாய். பாடல் வரிகள்- சமீர் சமந்த்.
ae ri sakhi main ang ang aaj rang dar du ae ri sakhi main ang ang aaj rang dar du apne ji se prem rang kaise main utar du oo aeri sakhi tere bina kahi bhi na vyakul man lage…. birhan sur taal saaje aaj tere aage nainan ko chain nahi ren ren jaage… ek pal me tut jaye saans ke ye dhaage tu jo mu phere sakhi deh praan tyaage pal bhar tu dekh mujhe zindagi guzaar du ooo ae ri sakhi main ang ang aaj rang dar du apne ji se prem rang kaise main utar du ooo ae ri sakhi ae ri sakhi....
தோழி இன்று நான் உடல் முழுவதும் வர்ணம் பூசிக் கொள்கிறேன்
என்னில் இருந்து காதலின் வர்ணத்தை எப்படி அகற்றுவேன்
உன்னிடம் தவிர வேறு எங்கும் என் துக்கம் நிறைந்த மனம் ஈடுபடவதில்லை
பிரிந்து போன என் ஸ்வரமும் தாளமும் இணைந்தன இன்று உன் முன்னால்
கண்களுக்கு அமைதி இல்லை இரவெல்லாம் விழித்ததால்
ஒரு நொடியில் அற்று விடலாம் என் மூச்சின் சரடு
நீ முகம் திருப்பிக் கொண்டால் என் உடல் உயிரை விட்டு விடும்
ஒரு நொடி என்னைப் பார் வாழ்வை வாழ்ந்து தீர்த்து விடுகிறேன்
**************
ரங்கீலாவின் ‘ஹாய் ராமா’வும், நினைவெல்லாம் நித்யாவின் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றலு’ம் கூட இதே ராகத்தில் அமைந்த பாடல்கள் தாம்.
ராகம்/பாடல்கள் தேர்வு- தேஜஸ்ரீ ஜெயகாந்த்