தேவதாஸ் படத்தில் வரும் ‘காஹே சேட் சேட் மோஹே’ என்ற இப்பாடல் பூர்யா தனஸ்ரீ ராகத்தில் அமைந்துள்ளது. கர்நாடக ராகம் பந்துவராளிக்கு மிக அருகில் இருப்பது இந்த ராகம். இது சாயங்காலத்தில் பாடப்படும் ராகம்.
பாடலின் ஆரம்பத்தில் வரும் பகுதி கதக் டான்ஸர் பிர்ஜு மஹராஜால் பாடப்பட்டிருக்கிறது. பாடலின் நடுவில் வரும் வசனப் பகுதி மாதுரி தீக்ஷித்தால் பாடப்பட்டிருக்கிறது. இஸ்மாயில் தர்பாரும், கவிதா கிருஷ்ணமூர்த்தியும் மிகுதி பாடலைப் பாடியுள்ளனர்.
தமிழில் ‘ஓராயிரம் யானைக் கொன்றால் பரணி’ இந்த ராகத்தில் அமைந்துள்ள ஒரு நல்ல பாடல். நந்தா படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உன்னிகிருஷ்ணன் பாடியது இது.
ராகம்/பாடல்கள் தேர்வு: தேஜஸ்ரீ ஜெயகாந்த்