
ஒரு மழை நாள் அது மணியறை சுற்றிச் சுற்றி ஒடிக் கொண்டிருந்தனர் அன்று எப்படியோ தப்பி விட்டாள் மற்றொரு மழை நாள் அவள் விழித்த போது கை கால்கள் கட்டிலோடு கட்டப் பட்டிருந்தன உயிர் போகும் வலி பின்னொரு நாள் கருவுற்றிருக்கிறேன் என்றாள் எட்டி உதைத்ததும் சிதைந்தாள் மற்றுமொரு மழை நாள் நகைகளை மீட்க வீட்டுக்கு வந்தாள் ஓங்கி அறைந்து கதவை சாத்தினர் மீண்டுமொரு மழை நாள் மெல்ல மெல்ல அவள் அணைப்புக்குள் தன் காதலைக் கண்டாள் காதலென்றால் காதலே தான்