அஷ்வினி பிடே தேஷ்பாண்டே பாடும் இந்த க்யால் + தரானா ராகம் ஜோக்-ல் அமைந்துள்ளது.
ராகம் ஜோக் இரவு பாடப்படும் ராகம். பெரும்பாலும் சிருங்கார ரசத்திற்கு இந்த ராகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மலையாள மொழிப் பாடல்களான ‘பிரமதவனம் வீண்டும்’ , ‘பறையான் மறந்ந பரிபவங்கள்’ இந்த ராகத்தில் அமைந்தவை. தமிழில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் ‘நியூ’ படத்தில் வரும் ‘ஸ்பைடர்மேன்’ என்ற பாடலும் இதே ராகத்தில் அமைந்துள்ளது.
ராகம்/பாடல்கள் தேர்வு: தேஜஸ்ரீ ஜெயகாந்த்