
வெட்டவெளியில் ஒரு ஒற்றைச் செடி சார்ந்து வளர ஒரு கொம்பில்லை எப்போதோ எங்கிருந்தோ வந்து முளைத்த விதை அவள் தண்ணீர் விட ஆளில்லை இலைகள் துவண்டிருந்தன காம்புகள் காயத் துவங்கியிருந்தன சதா தலை கவிழ்ந்திருந்தாள் அவள் வேர் மட்டும் ஓய்வின்றி நீர் தேடி அலைந்தது சட்டென்று ஒரு நீரோட்டத்தைக் கண்டு கொண்டது பச்சை பிடித்து விட்டாள் இனி கவலையில்லை ஆனாலும் வெட்டவெளியில் விதையை முளைக்க வைக்கும் முன் கடவுள் கொஞ்சம் யோசித்திருக்கலாம் அந்த விதையும் வெளியுமாவது ஒரு முறை யோசித்திருக்கலாம்