
குயவன் ஒருவன் தன்னோடு தான் மட்டுமாகி தனக்கென்று பானை ஒன்றை வனைந்தான் அதில் வெள்ளையும் பச்சையும் மஞ்சளும் என வர்ணம் தீட்டினான் மயிலும் கிளியும் குருவியும் வரைந்தான் மதியத்தில் அங்கு வந்த ஒரு பயணிக்கு அதில் குளிர்ந்த நீரளித்தான் பயணி பானையை ரசித்தான் தனக்குத் தரக் கேட்டான் குயவன் புன்னகையுடன் தந்து விட்டு மெல்ல அங்கிருந்து விலகினான்