உயிருதிர் காலம்

உயிர் மூச்சும்
வாய் நீரும்
நஞ்சென்றாயின

அரவம் தீண்டியதால்
அரவம் என்றேயாயினர்

தொட்டுத் தொட்டு
சாவைக் கடத்தினர்

உயிர் பிழைக்க வேண்டி
தனித் தீவுகளாயினர்

விடிந்தது 
உயிருதிர் காலம்

உதிரும் ஓசையும்
கேட்காத் தனிமையில்
கொத்துக் கொத்தாய்
உதிர்ந்தனர்

பேரவலம்
இது 
ஊழி நடனம்